ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை ரத்து செய்யலாமா?.. ஜெ.வுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: சென்னை ஆர்.கே.நகரில் நடந்த இடைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் அளிக்குமாறு கூறி தேர்தல் ஆணையம் மற்றும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரான முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையானதைத் தொடர்ந்து ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்பதற்காக சென்னை ஆர். கே நகரில் அதிமுக உறுப்பினராக இருந்த வெற்றிவேல் ராஜினாமா செய்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் கொண்டு வரப்பட்டது. அதில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த இடைத் தேர்தலின்போது, சுரேஷ் என்பவர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனு தள்ளூபடி செய்யப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதாவின் வேட்புமனு முறையாக முன்மொழியப்படவில்லை எனவும், ஆர்.கே.நகர் தேர்தல் செல்லாது என அறிவிக்கவும் எனக்கூறி தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தார் சுரேஷ். ஆனால் அம்மனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா விசாரணை செய்தார். அப்போது, ஆர்.கே.நரில் தனது மனுவை முறையாக பரிசீக்கவில்லை என சுரேஷ் தரப்பு வக்கீல் வாதிட்டார். இதைத் தொடர்ந்து 4 வாரத்திற்குள் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி தேர்தல் ஆணையம், முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications