நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் - திமுக, பாமக வழக்கு.. தமிழக அரசுக்கு நோட்டீஸ்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா பிறப்பித்த தீர்ப்பை விமர்சித்து அதிமுகவினர் வைத்த போஸ்டர்கள், பேனர்கள் குறித்து திமுக, பாமக மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ள சென்னை உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நவம்பர் 11ம் தேதிக்குள் விளக்குமாறு கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து நீதிபதி குன்ஹாவை கண்டித்தும், திட்டியும், அசிங்கமாக விமர்சித்தும் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டினர், பேனர் வைத்தனர். இது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி, பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் மற்றும் நீதிபதி சத்யநாரயணா ஆகியோர் அடங்கிய முதலாவது பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அதை ஏற்றனர். பின்னர், நீதிபதியை அவமதித்த செயல் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து நவம்பர் 11ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இதேபோல வேலூர் மாநகராட்சியில் நீதிபதி குன்ஹாவைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாகவும் விளக்கம் அளிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications