தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க கோர்ட் இடைக்கால தடை!
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் வைகோ மனு தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மேற்குத் தொடர்ச்சி மலையில் 8 லட்சம் டன் பாறைகளை வெடிவைத்து தகர்க்க உள்ளனர். ஆய்வு மையம் அமைக்கும் பகுதி நில அதிர்வு மண்டலத்துக்குள் வருகிறது. இதனால் கேரள, தமிழக மக்கள் பாதிக்கப்படுவர். முறையான ஆய்வு நடத்தாமல் இடத்தை தேர்வு செய்துள்ளனர். விவசாயத்துக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை பொட்டிபுரத்தில் செயல்படுத்தக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை நியூட்ரினோ மையத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் " பொட்டிபுரத்தில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்துக்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து உரிய அனுமதி பெறும்வரை அங்கு ஆய்வுப் பணிகள் எதையும் மேற்கொள்ளக்கூடாது" என்று இடைக்கால உத்தரவிட்டனர். முக்கிய மனு மீதான விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications