ராயப்பேட்டை மருத்துவமனையில் ராம்குமார் உடல் இன்று பிரேத பரிசோதனை
சென்னை: புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ராம்குமாரின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என ராயப்பேட்டை மருத்துவமனை டீன் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.
மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ராம்குமார் புழல் சிறையில் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராம் குமாரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

ராம்குமாரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், பிரேத பரிசோதனையை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடத்த வேண்டும், பிரேத பரிசோதனையின் போது தங்கள் தரப்பிலிருந்து சிலர் உடனிருக்க வேண்டும் என ராம்குமாரின் வழக்கறிஞர் சங்கரசுப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம், இந்த மனுவை மதியம் 2.15 மணிக்கு விசாரிப்பதாகவும்,உயர்நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை ராம்குமாரின் பிரேத பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அத்துடன் நேற்று மதியம் 2.15 மணிக்கு அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து நேற்று மதியம் மனுவை விசாரித்த நீதிபதிகள்,சில நிபந்தனைகளோடு ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளனர். 4 மருத்துவர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனையில் ஈடுபட வேண்டும் எனவும்,பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவாக படம்பிடிக்கப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ராயப்பேட்டை மருத்துவமனை டீன் நாராயணபாபு, ராம்குமார் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றார்.
இந்த பிரேத பரிசோதனைக்குப் பின்னர் ராம்குமாரின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் தனது மகனின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வோம் என்று ராம்குமாரின் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications