நடிகர் சங்கத் தேர்தல் தடையை நீக்க முடியாது – ராதாரவி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் அதிரடி
சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் இந்த மாதம் 15 ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விஷால் தலைமையிலான அணியினர் அதற்கு எதிரான தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்றது அனைவரும் அறிந்ததே.

தற்போது இந்த வழக்கில் மேலும் ஒரு அதிரடி திருப்பமாக நடிகர் சங்கத் தேர்தல் தடையை நீக்க முடியாது, என்று தனி நீதிபதிகள் அடங்கிய குழுவினர் உத்தரவிட்டுள்ளனர். நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை விதித்ததை எதிர்த்து நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் ராதாரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் கவுள் மற்றும் சிவஞானம் ஆகிய இருவரும் நடிகர் சங்கத் தேர்தலுக்கான தடையை நீக்க முடியாது, மேலும் இந்த மாதம் 28ம் தேதிக்குள் நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக இதில் சம்பந்தப்பட்ட அனைத்து சங்கங்களும் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
