பெண்ணின் கையை முறித்த காவலருக்கு எதிராக புகார்- அவசர வழக்காக விசாரிக்க ஹைகோர்ட் முடிவு
ஐஐடியில் நடந்த போராட்டத்தின் போது பெண்ணின் கையை முறித்த பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹைகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மனு தாக்கல் செய்ய ஹைகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை: சென்னை ஐஐடி மாணவர் சூரஜூக்கு ஆதரவாகப் போராடிய பெண்ணின் கையை, காவலர் ஒருவர் முறித்தது தொடர்பான வழக்கை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. மனு தாக்கல் செய்தால் அவசர வழக்காக எடுத்து விசாரிப்பதாகவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
சென்னை ஐஐடி மாணவர் சூரஜுக்கு ஆதரவாகப் போராடிய பெண்ணின் கையை, காவலர் ஒருவர் முறித்தது தொடர்பான வழக்கை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. அவசர வழக்காக எடுத்து விசாரிப்பதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 28ம் தேதி இரவு ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி உணவுத் திருவிழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவன் சூரஜ், ஐஐடி வளாக கேன்டீனில் கடுமையாக தாக்கப்பட்டார். இதில் கண் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூரஜ் உடல்நலம் தேறி வருகிறது. எனினும் சூரஜை தாக்கிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சூரஜுக்கு ஆதரவாக சென்னை ஐஐடி வளாத்தை முற்றுகையிட்டு, புரட்சிகர இளைஞர் முன்னணி, இந்திய மாணவர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்து, கைது செய்தனர்.
#BREAKING - A constable breaks hand of a student protester over beef row #CampusBeefWar pic.twitter.com/kQIEVKZJqi
— News18 (@CNNnews18) May 31, 2017
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரின் மணிக்கட்டுப் பகுதியை, பெண் காவலர் ஒருவர் வேண்டுமென்றே முறித்ததாக கூறப்பட்டது. பெண்ணின் கையை காவலர் முறிக்கும் காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்திகளில் ஒளிபரப்பப்பட்டது.
பெண் காவலரின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. சமூக வலைதளங்களில் காவல்துறையினர் செயலைக் கண்டிக்கும் வகையில் இளைஞர்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். இதனிடையே பெண்ணின் கையை முறித்த பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் என்பவர் வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். மனுவை தாக்கதல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மனு தாக்கல்செய்தால், அவசர வழக்காக எடுத்து விசாரிப்பதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications