சின்னசாமி நீக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர், துணை முதல்வருக்கு நோட்டீஸ்!

அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சின்னசாமி தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க முதல்வர், துணை முதல்வருக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சின்னசாமி தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க முதல்வர், துணை முதல்வருக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பதவியில் இருந்த சின்னசாமி கடந்த 3ம் தேதி விடுவிக்கப்பட்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

Madras highcourt issued notice to CM Palanisamy and deputy CM O.Paneerselvam

அண்ணா தொழிற்சங்கத்தைப் பொறுத்தவரை, தாடி ம.ராசு மற்றும் சின்னச்சாமி இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருவதாக காரணம் சொல்லப்பட்டது. போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த போராட்டத்தின் போது, அண்ணா தொழிற்சங்கத்தினரும் பங்கேற்றனர். இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், சின்னசாமி மீது நடவடிக்கை பாய்ந்தது.

தன்னை பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியதை எதிர்த்து சின்னசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தன்னை அண்ணா தொழிற்சங்கத்தில் இருந்து நீக்கியது சட்டவிரோதமான நடவடிக்கை என்றும் சின்னசாமி மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சின்னசாமி நீக்கம் குறித்து விளக்கம் அளிக்குமாறு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+