”பசங்களா பல் இருக்கறப்போவே பக்கோடா சாப்பிடுங்க”- இது மெட்ராஸ் மீட்டரின் கலக்கல் “மேட்ச் பிக்சிங்”!
சென்னை: ஒரு காலத்தில் நாமெல்லாம் பையனுக்கு, பெண்ணுக்கோ வரன் பார்ப்பதென்றால் தேடி பிடிப்பது ஒரு கல்யாணத் தரகரைத்தான்.
ஆனால், இன்று உலகமே ஹைடெக் ஆகிவருவதற்கு ஏற்றார் போல கல்யாண தரகர்களும் "மேட்ரிமோனியல் சைட்" என்ற பெயரில் திருமணங்களை நடத்தி வைக்கும் வேலையினை இணையதளங்களின் வழியாக பார்த்து வருகின்றார்கள்.
வெத்தலைப் பெட்டி போய் இன்று விஞ்ஞான வளர்ச்சியைக் கையில் எடுத்து கலிகாலத்தில் கல்யாணம் செய்து வைக்க அவர்கள் என்னவெல்லாம் பாடு படுகின்றார்கள்...

மெட்ராஸ் மீட்டரின் சூடு பறக்கும் வீடியோ:
இதில் மேட்ரிமோனியலில் பார்த்து நேரில் பேசும் பையனிடமோ, பெண்ணிடமோ மற்றவர்கள் என்ன சொல்லலாம்..சொல்லக்கூடாது எல்லாவற்றையும் கலந்து கட்டி ஒரு சூப்பர்ப் காமெடி கலந்த வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர் மெட்ராஸ் மீட்டர் என்ற குழுவினர்.

ஹைய்யோ தப்பா சொல்லிட்டேனே:
முதலில் மேட்ரிமோனியல் ஓனர் தம்பதிகள் அடிக்கும் அலப்பறையில் துவங்கிறது வீடியோ... "வி டண் 1 லேக் மேரேஜஸ்... இன்குளூடிங் மை மேரேஜ் அண்ட் மை வைப் மேரேஜ்" என்று சொல்லி மனைவியிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார் வெப்சைட் ஓனர்.

மயக்கம் தரும் மேட்ச் பிக்சிங்:
இதில் பத்தாக்குறைக்கு வரன் தேடும் பெண், பையனை மீட் செய்ய வேறு வைக்கின்றார்கள்.. கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்கினை விட கஷ்டமான விஷயம் இந்த திருமண மேட்ச் பிக்சிங்தான் என்று நன்றாக எடுத்துக் காட்டியிருக்கின்றார்கள்.

ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு பாஸ்:
பெண்ணுங்களில் மூணு வகை... குடும்ப குத்துவிளக்கு...வேலைக்கு போகும் வீராங்கனை...குழப்பம் என்று மூன்று ரகமாம். அதிலும் பையனைப் பார்க்கப் போகும் பெண்களின் எதிர்ப்பார்ப்புகள் என்று ஒரு பட்டியல் போட்டு தாக்குகிறார்கள்.

எங்களுக்கு பிடிச்சா மட்டும் போதும்:
ஆனா பசங்களுக்கு "கடவுளே இந்தப் பொண்ணாவது ஓகே சொல்லனும்" என்கின்ற ஒரே யுனிவர்சல் வார்த்தைதான்..பையனுக்கு பிடிச்சா ஹோட்டல் பில் அவனும், பொண்ணுக்கு பிடிச்சா ஹோட்டல் பில் அவளும் பே பண்ணுவாங்களாம்...ஆனா, கன்ப்யூஷன் பார்ட்டிஸோ இதுக்கும் குழம்பி கடைசியா பையன் தான் பில் பே செய்வாராம்.
பல் இருக்கப்பவே பொழைச்சுக்கோங்க:
பிளா...பிளா..பிளா கடைசியா ஒரு வழிக்கு வந்து, சரியான பொண்ணை தேர்ந்தெடுத்து ஷப்பா ஒரு வழியா கல்யாணம் கட்டிக் கொள்கின்றார்கள்... ஜாதகம் சரியில்லைனு தட்டிக் கழிப்பவர்கள் கடைசி, கடைசியா குழந்தையே பிறந்து ஸ்கூல் போகும் வயதில் கட்டிக் கொள்கிறார்கள்... கடைசியா மாரல் ஆப் தி ஸ்டோரி "பல் இருக்கறப்போவே பக்கோடா சாப்பிடுங்க" என்று கலகலப்பா முடித்து வைக்கிறார்கள் வீடியோவை... கல்யாணத்துக்கும், அரேஞ்சுடு மேரேஜுக்கும் வெயிட் பண்ணும் பசங்க, பொண்ணுங்க மிஸ் பண்ணாம பாருங்கப்பா!
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications