இது இறைவனின் அணி.. இதுவே வெல்லும்.. சரத் அணிக்கு மதுரை ஆதீனம் ஆசி + ஆதரவு!
மதுரை: நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணியே வெல்லும் என்று மதுரை ஆதீனம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சரத்குமார் அணிக்கும், நாசர், விஷால் உள்ளிட்டோர் தலைமையில் தனிப் பிரிவாக செயல்பட்டு வரும் இன்னொரு குழுவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போதைய தலைவர் சரத்குமார் தலைமையிலான குழுவினர் மதுரை வந்து ஆதீனத்தைச் சந்தித்து ஆதரவு திரட்டினர். ஆசிர்வாதமும் பெற்றனர். பின்னர் ஆதீனம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறுகையில், நடைபெறக்கூடிய தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணிக்கு எமது ஆதரவு உண்டு. இவர்களே இறைவன் நிறுத்தியுள்ள அணி.
திரைப்படத்துறைக்கும், ஆன்மிகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. திரைப்படத்துறையினர் ஆண்டவனின் கட்டளைப்படிதான் இயங்குகின்றனர். எனவே நாமும் திரைப்படத்துறையினரும் நெருக்கமாக இருப்பதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications