மதுரை துணை மேயராக திரவியம் போட்டியின்றி தேர்வு
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாநகராட்சி துணை மேயராக அதிமுகவின் திரவியம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சியின் துணை மேயராக அதிமுகவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் இருந்து வந்தார். 16வது மக்களை தேர்தலை முன்னிட்டு, அவரை
மதுரை அதிமுக வேட்பாளராக அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெலலிதா அறிவித்தார்.
இதனையடுத்து தமிழகத்தில் அதிமுக போட்டியிட்ட 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் மதுரை தொகுதியும் ஒன்று. இதனால்
கோபாலகிருஷ்ணன் துணை மேயர் பொறுப்பில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், மதுரை துணை மேயர் பதவி காலியாக இருந்தது. இதற்கு அதிமுக சார்பில் வேட்பாளராக திரவியத்தை அக்கட்சியின் பொதுச்
செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். இதனையடுத்து, மதுரை மாநகராட்சி துணை மேயராக திரவியம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications