பொட்டு சுரேஷ் கொலை வழக்கு... அட்டாக் பாண்டியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
மதுரை : பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அட்டாக் பாண்டியை 4 நாட்கள் எடுத்து காவலில் விசாரிக்க, போலீசாருக்கு, நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு நெருக்கமாக இருந்த பொட்டு சுரேஷ் கொலை வழக்கில், அட்டாக் பாண்டி மும்பையில் அண்மையில் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரை மத்திய சிறையில் அவர் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை 10 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, நீதிமன்றத்தில் போலீசார் நேற்று முன் தினம் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று விசாரணை நடைபெற்றபோது, சுப்ரமணியபுரம் காவல்நிலைய ஆய்வாளர் கோட்டைசாமி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அட்டாக் பாண்டியின் தூண்டுதலின் பேரிலேயே, பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டதாக, ஏற்கனவே கைதான 3 பேர் வாக்குமூலம் அளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். அட்டாக் பாண்டி தலைமறைவாக இருந்தபோது, 16 செல்போன்கள் மற்றும் 3 ஏ.டி.எம்.களை பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
எனவே, வழக்கினை முன்னெடுத்துச்செல்ல அட்டாக் பாண்டியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்குமாறும் காவல் ஆய்வாளர் கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து, அட்டாக் பாண்டியை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, போலீசாருக்கு, நீதிபதி பால்பாண்டி அனுமதி அளித்தார்.
மேலும் வரும் 27 ஆம் தேதி, அதிவிரைவு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா முன்பு அட்டாக் பாண்டியை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications