இறைச்சி மாடு விற்பனை விவகாரம்.. மேலும் 4 வாரம் தடையை நீட்டித்த ஹைகோர்ட்
இறைச்சிக்காக மாடுகளை விற்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை: இறைச்சிக்காக மாடுகளை விற்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கான தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவது தடை செய்யப்படுவதாக கடந்த மே மாதம் 26ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மாடுகளின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதால்,விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புகார் எழுந்தது. மேலும் தனி மனித உணவு விஷயத்தில் மத்திய அரசு தலையிடுவதாக பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து மதுரையை சேர்ந்த செல்வகோமதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த மே 30ம் தேதி ஒரு பொதுநலன் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் உணவு மனிதனின் அடிப்படை உரிமை, இதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது.
இந்த மனுவை அவசர வழக்காக ஏற்ற நீதிமன்றம் மத்திய அரசு விளக்கம் அளிக்கும் வரை அரசு கொண்டுவந்த கட்டுப்பாடுகளை செயல்படுத்த தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாட்டிறைச்சி தடை விவகாரம் குறித்து பதில்மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரினார். இதனை ஏற்ற நீதிமன்றம் பதில் மனு தாக்கல் செய்யும் வரை மேலும் 4 வாரங்களுக்கு மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளுக்கு எதிரான தடை நீடிப்பதாகவும் உத்தரவிட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications