கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு நாட்டுப்படகை அனுமதிக்க நீதிமன்றம் உத்தரவு!
கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு செல்ல அடுத்த ஆண்டு முதல் நாட்டுப்படகுகளை அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை : கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு செல்ல அடுத்த ஆண்டு முதல் நாட்டுப்படகுகளை அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த 3 பேர் தாக்கல் செய்த மனு மீது தமிழக அரசுக்கு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த நல்லதம்பி உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தனர். மனுவில் 1976 ஒப்பந்தப்படி கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்களை உலர்த்திக் கொள்ளவும், அங்குள்ள புனித அந்தோணியார் கோவில்திருவிழாவில் பங்கேற்கலாம் என்ற உரிமை வழங்கப்பட்டது.

கடந்த 2013ம் ஆண்டுவரை மீனவர்கள் நாட்டுப்படகுகளில் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க சென்றுவந்த நிலையில், அதற்கு பின்னர் மறுக்கப்பட்டு வருகிறது. தற்போது இது வியாபார நோக்கத்துடன் விசைப்படகில் ஒருவருக்கு ரூ. 1,500 முதல் ரூ. 2,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் குடும்பத்துடன் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல முடியவில்லை என்று மனுதாரர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.
முற்றிலும் வணிக நோக்கமாக மாறிவிட்ட நிலையில் பாரம்பரிய மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்ட நாட்டுப்படகில் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். நாட்டுப்படகில் பயணிப்பது ஆபத்து என்பதால் மீனவர்களின் நலன் கருதியே நாட்டுப்படகு அனுமதிக்கப்படவில்லை என்று அரசுத் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு கச்சத்தீவு திருவிழா நெருங்கி விட்டதால் இந்த ஆண்டு உத்தரவை அமல்படுத்த முடியாது. எனவே அடுத்த ஆண்டு முதல் நாட்டுப்படகுகளை கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல அனுமதிப்பதோடு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications