ஆளுநர் ரவிக்கு எதிராக போஸ்டர்.. மதுரை திமுக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி.. கைது செய்த காவல்துறை

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றம் செய்யக்கோரி தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகியை மதுரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 27ஆம் தேதிக்குள் மாற்றாவிட்டால் தீக்குளிப்பேன் என்று போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய அந்த நபர் சொன்னது போலவே தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. சனாதனத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது, திராவிட மாடல் தொடர்பாக கேள்வியெழுப்புவது, திருக்குறளின் ஜி.யு.போப் மொழிபெயர்ப்பை விமர்சித்திருந்தது, தமிழ்நாடு-தமிழகம் சர்ச்சை, கார்ல் மார்க்ஸ் மீதான விமர்சனம், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் என அவர் பேசிய விஷயங்கள் அனைத்திற்கும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கிடையே எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறும் அனைத்து அம்சங்களும் ராம ராஜ்ஜியத்தில் இருந்துள்ளன. அனைவருக்கும் அனைத்தும் என்பது ராம ராஜ்ஜியத்தின் சாரம். 1976ம் ஆண்டுதான் இந்தியாவில் மதச்சார்பின்மை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கருத்தியல் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டதுதான். இந்தியாவை பொறுத்த அளவில் மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் சரி சமமாக மதிப்பது என்பதுதான்" என ஆளுநர் ரவி கூறியிருந்த கருத்து சரச்சையை ஏற்படுத்தியது.

Madurai DMK executive arrested for Opposing RN Ravi and Attempt to Set Fire Himself

திருக்குறளை ஆங்கிலத்தில் ஜி.யு.போப் சரியாக மொழிபெயர்க்கவில்லை. இந்த மொழி பெயர்ப்பில் ஆன்மா இல்லை என்று ஆளுநர் ரவி கூறிய கருத்து தமிழறிஞர்களிடையே போராட்டத்தை தூண்டியது. இதற்கெல்லாம் உச்சமாக அமைந்ததுதான் தமிழகம்-தமிழ்நாடு பிரச்னை. அதாவது தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதே பொருத்தமானது என்று அவர் கூறியபோது ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்தன.

இந்த மோதல் போக்கின் உச்சமாக சட்டசபையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய சம்பவம் அமைந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இதற்கு பின்னர் செந்தில் பாலாஜி இலாக இல்லாத அமைச்சாரக தொடர வேண்டும் என்றும், அவர் வகித்து வந்த இலாகாக்களை மற்ற அமைச்சர்களுக்கு மாற்றியும் உத்தரவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதில் இரண்டாவது பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஆளுநர், செந்தில் பாலாஜி இலாக இல்லாத அமைச்சராக தொடர்வார் என்பதை ஏற்க மறுத்துவிட்டார். இது தமிழக அரசியலில் மற்றொரு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த முடிவுக்கு திமுக மட்டுமல்லாது, அதன் கூட்டணி கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.

ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆளுநரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், ஜூன் 27ம் தேதிக்குள் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றம் செய்யாவிட்டால், தீ குளித்து உயிரை மாய்த்துக் கொள்வேன் என மதுரையில் திமுக நிர்வாகி கணேசன் என்பவர் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார்.

நேற்றுடன் 27ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் கணேசன் போஸ்டரில் சொன்னது போல தீக்குளிக்க முயற்சி செய்தார் இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் கணேசனை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+