மாற்றுத்திறனாளிகள் தடகள போட்டியில் 3 தங்கம் வென்று சாதனை...மதுரை விவசாயி மகனுக்கு உற்சாக வரவேற்பு!
கனடாவில் நடந்த உலக அளவிலான உயரம் குன்றியவர்களுக்கான விளையாட்டு போட்டியில் 3 தங்கம் வென்ற மதுரையைச் சேர்ந்த கணேஷனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மதுரை : உலக அளவிலான உயரம் குன்றியவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் 3 பிரிவுகளில் தங்கம் வென்ற விவசாயியின் மகன் கணேஷனுக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
குள்ளமான மாற்றுத் திறனாளிகளுக்கான, 17வது உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகள், கனடாவில் நடந்தது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்தப் போட்டியில், இந்த ஆண்டு 62 நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். தடகளம், நீச்சல், கால்பந்து உள்ளிட்ட 10 பிரிவுகளில் போட்டிகள் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் ஆகஸ்ம் 13 வரை போட்டிகள் நடந்தது.

இந்த சர்வதேச போட்டியில் இந்தியாவில் இருந்து, 18 வீரர்கள் பங்கேற்றனர். இவர்களில் மதுரையை சேர்ந்த எம்.இ. பட்டதாரி மனோஜ், உசிலம்பட்டியை சேர்ந்த கணேசனும் பங்கேற்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை என்ற கிராமத்தை கணேசன் இந்தப் போட்டிகளில் விளையாடி குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் பிரிவுகளில் பங்கேற்றார். இந்த மூன்றிலுமே தங்கப்பதக்கம் வென்று சாதனையும் படைத்துள்ளார் கணேசன்.

பதக்கங்களுடன் இன்று தனது சொந்த ஊரான உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்திற்கு வந்த கணேசனுக்கு வெடி வெடித்து, தாரைதப்பட்டம் முழங்க உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாராஒலிம்பிக் போட்டியில் வென்ற மாரியப்பனுக்கு அளித்த உதவிகள் போல தனக்கும் நிதி வழங்கி ஊக்கப்படுத்தினால் மேலும் பல போட்டிகளில் பங்கேற்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன் என கணேஷன் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications