ஓகி புயல் பாதிப்பில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது.. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி இருக்கிறது.
மதுரை: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி இருக்கிறது. புயல் பாதிப்பில் மத்திய அரசு என்ன விதமான நடவடிக்கை எடுத்து இருக்கிறது என்று கேள்வி எழுப்பி நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
இரண்டு வாரம் முன்பு தமிழகத்தை ஓகி என்ற புயல் மிகவும் மோசமாக தாக்கியது. இதனால் கன்னியாகுமரி, கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் காணாமல் போனார்கள். இவர்களில் பலர் இன்னுமும் வீடு திரும்பவில்லை.

இந்த புயல் காரணமாக மீனவ மக்களின் வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டது. பலர் வீடுகளை இழந்து, கடலில் காணாமல் போன பின்பும் இந்த பாதிப்பை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்காமல் இருந்தது.
இந்த நிலையில் இந்த ஓகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. மேலும் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தனர்.
தற்போது குமரியை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது. அதில் மத்திய அரசு ஏன் இன்னும் இதில் முடிவு எடுக்கவில்லை என்று கேட்டு உள்ளது. மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.
அதேபோல் காணாமல் போன மீனவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தயார் செய்து தரவேண்டும் என்றும் ஆணையிட்டு இருக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications