கருப்பசாமி பாண்டியனுக்கு நிபந்தனை முன்ஜாமீன்- குற்றாலத்தில் தங்கி கையெழுத்துப் போட உத்தரவு
மதுரை: பாலியல் வழக்கில் நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியனுக்கும் அவரது உதவியாளர் அல்லல் கார்த்திக்குக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நிபந்தனை முன்ஜாமீன் அளி்த்துள்ளது.
நெல்லை மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் கருப்பசாமி பாண்டியன். இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,

நெல்லையை சேர்ந்த நாலடியார் மகள் தமிழரசி கொடுத்த பாலியல் புகாரில் பேரில் என் மீது குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திமுக உள்கட்சி தேர்தலில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் முன்னாள் எம்எல்ஏ மாலை ராஜா மீது கட்சி மேலிட தலைவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனால் மாலை ராஜா தமிழரசியை தூண்டி விட்டு என் மீது பாலியல் புகார் கொடுக்க செய்துள்ளார்.
அவர் கூறியது போன்று எந்த சம்பவமும் நடக்கவில்லை. இந்த வழக்கில் போலீசார் என்னை கைது செய்ய வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த மனு 2 நாட்களுக்கு முன்பு நீதிபதி சிடி செல்வம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கருப்பசாமி பாண்டியன் சார்பில் ஆஜாரான வக்கீல் ஆனந்த் மனுதாரர் மீது பொய்யான புகார் தரப்பட்டுள்ளது. தேவையில்லாமல் செய்தி பெரிதுப்படுத்தப்படுகிறது என்றார்.
இந்த நிலையில், புகார்தாரர் தமிழரசி நேரில் ஆஜராகி வழக்கில் என்னையும் எதிர்மனுதாரராக சேர்த்து எனது விளக்கத்தையும் கேட்க வேண்டும் என்றார். இதனை ஏற்று கொண்ட நீதிபதி மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
அப்போது குற்றாலம் இன்ஸ்பெக்டர் மன்னவன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கருப்பசாமி பாண்டியன் தமிழரசியிடம் தவறாக நடந்துள்ளார். பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது. வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்து விசாரணை நடத்த வேண்டி உள்ளது. மனுதாரர் அரசியல் பலம் மிக்கவர் என்பதால் முன்ஜாமீ்ன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து முன் ஜாமீன் மீதான விசாரணை மீண்டும் இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இன்று மீண்டும் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சி.டி. செல்வம் கருப்பசாமி பாண்டியனுக்கும், கார்த்திக்குக்கும் நிபந்தனை முன்ஜாமீன் அளி்த்து உத்தரவிட்டார். ஒரு வாரத்திற்கு குற்றாலத்தில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications