செல்லதுரை கவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்.. மதுரை காமராஜர் பல்கலை.யில் 30 நாளில் பட்டமளிப்பு விழா!!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஒரு மாதத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என அப்பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை தெரிவித்துள்ளார்.
மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஒரு மாதத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என அப்பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை தெரிவித்துள்ளார். பட்டமளிப்பு விழா என்று நடைபெறும் என ஆளுநரிடம் அனுமதி பெற்று தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மதுரை காமராஜ்ர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் செல்லத்துரை மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் ஒரு மாதத்துக்குள் பட்டமளிப்பு விழா நடைபெறும் என்று அவர் கூறினார். விழா நடைபெறும் தேதி ஆளுநரிடம் அனுமதி பெற்று தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் காலியாக உள்ள நிர்வாக பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று செல்லத்துரை தெரிவித்துள்ளார். மேலும் 2 ஆண்டுகளில் இழந்த அந்தஸ்த்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மீண்டும் பெரும் என்றும் செல்லத்துரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
