மனைவியை இழந்த மதுரை முத்துவுக்கு 2வது திருமணம்.. வதந்தியைக் கிளப்பிய நெட்டிசன்கள்!
மதுரை: விபத்தில் மனைவியை இழந்த மதுரை முத்துவுக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளதாக புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பரவி வருகிறது. ஆனால், இது குறும்படம் ஒன்றிற்காக எடுக்கப்பட்ட காட்சி என முத்து விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல நகைச்சுவைப் பேச்சாளரும், நடிகருமான மதுரை முத்துவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி கடந்தாண்டு சாலை விபத்தொன்றில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவியின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாத, தொடர்ந்து மனைவி குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கண்ணீர் பதிவுகளை வெளியிட்டு வந்தார். அதில், குழந்தைகளுக்காக மட்டுமே வாழ்வதாகவும், ஊரையே சிரிக்க வைக்கும் தன்னால் ஒரு நிமிடம் கூட சிரிக்க முடியவில்லை என்றும் வேதனை தெரிவித்தார்.
சமீபத்தில் கூட தனது திருமணப் புகைப்படம் மற்றும் மனைவியின் பிறந்தநாளுக்கு அவரைப் பற்றிய பதிவு போன்றவற்றை அவர் வெளியிட்டிருந்தார்.

2வது திருமணம்?
இந்நிலையில், இன்று பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் முத்துவும், வேறொரு பெண்ணும் கழுத்தில் மாலையுடன் நிற்கும் புகைப்படம் வேகமாகப் பரவி வருகிறது. கூடவே, மதுரை முத்துவிற்கு இரண்டாவது திருமணம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிர்ச்சி...
இது மதுரை முத்துவின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் பிரிவைக் குறித்து உருகி வந்த மதுரை முத்துவா, மனைவி இறந்த ஒரு வருடத்திற்குள் அடுத்த திருமணம் செய்து கொண்டார் என்ற கேள்வி அவர்கள் மனதில் எழுந்தது.

முத்து விளக்கம்...
ஆனால், இந்த குழப்பம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் மதுரை முத்து விளக்கமளித்திருந்தார். அதில், ‘இது குறும்படம் ஒன்றிற்காக எடுக்கப்பட்ட காட்சி' என அவர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் தற்போது அந்தப் பதிவு அவரது பேஸ்புக் பக்கத்தில் காண முடியவில்லை.

நாகரீகமற்ற செயல்...
ஏற்கனவே, மனைவியைப் பிரிந்த வேதனையில் மகள்களுடன் தவித்து வரும் மதுரை முத்துவை காயப்படுத்தும் வகையில் இப்படியாக புகைப்படங்களை இணையத்தில் பரவ விடுவது நாகரீகமான செயல் இல்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

விளம்பர யுக்தி...
சில திரைப்ப்படங்களில் தான் வியாபார உத்திக்காக இவ்வாறு அப்படத்தில் வரும் திருமணக் காட்சிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்கள். அதுபோன்று இதுவும் விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டதா என்பது தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications