மதுரை ஏ.வி. மேம்பாலத்தில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை
மதுரை: மதுரை ஆற்றுப்பாலத்திலிருந்து குதித்து முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ளது ஏ.வி. பாலம். இன்று காலை அந்தப் பாலத்தின் வழியாக முதியவர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். திடீரென பாலத்தின் தடுப்புச் சுவரில் ஏறிய அந்த முதியவர் வைகை ஆற்றினுள் குதித்தார்.
கோடை காலமாகையால், வைகை ஆற்றில் நீர் இல்லை. இதனால், பாலத்திலிருந்து குதித்த முதியவரின் கை மற்றும் கால் எழும்புகள் நொறுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
உடனடியாக இது குறித்து விளக்குத்தூண் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், முதியவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட முதியவர் காமராஜர் சாலையில் உள்ள லட்சுமிபுரம் 8-வது தெருவைச் சேர்ந்த அசோகன் (வயது 65) என தெரிய வந்துள்ளது. அசோகன் அதே பகுதியில் உள்ள ஒரு பலசரக்கு கடையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
அசோகனின் தற்கொலைக்குக் காரணம் குடும்ப பிரச்சினையா அல்லது வேறு ஏதேனுமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications