சரக்கு போதையில் அடிதடி... 'சிவகாசி ஜெயலட்சுமி' வழக்கில் சிக்கிய சப் இன்ஸ்பெக்டர், தம்பி பலி
மதுரை: 'சிவகாசி ஜெயலட்சுமி' வழக்கில் சிக்கிய மதுரை சப் இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம், அவரது தம்பி செல்லச்சாமி ஆகியோர் மதுபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் இருவரும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பரபரப்பை ஏற்படுத்தியவர் 'சிவகாசி ஜெயலட்சுமி'... போலீஸ் துறையில் ஏட்டு முதல் எஸ்.பி. வரை பலரையும் கைக்குள் போட்டுக் கொண்டு மோசடிகளில் ஜெயலட்சுமி ஈடுபட்டதாக புகார் கிளம்பி பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் பல போலீஸ் அதிகாரிகளின் தலைகள் உருண்டன.

இவர்களில் ஒருவர் மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த வெங்கடாச்சலம். சிவகாசி ஜெயலட்சுமி வழக்கில் சஸ்பென்ட் செய்யப்பட்டவர் வெங்கடாச்சலம்.
வெங்கடாச்சலம் தனது சகோதரர் செல்லச்சாமியுடன் நேற்று முன்தினம் மது அருந்திக் கொண்டே சொத்து பிரச்சனை குறித்து விவாதித்திருக்கின்றனர். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் இருவரும் கற்களை வீசி சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் சம்பவ இடத்திலேயே செல்லச்சாமி உயிரிழந்தார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த சப் இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு போகும்வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications