கோவை மதுக்கரையில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட 'மகாராஜ்' யானை திடீர் மரணம்
கோவை: கோவை மதுக்கரையில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ஒற்றை காட்டு யானை மகாராஜ் பொள்ளாட்சி வரகழியாறில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக கோவையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள மதுக்கரையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்து வந்தது ஒற்றைக் காட்டு யானை. தனி ஒருவனாக அந்த யானை செய்து வரும் அட்டகாசத்தால் மதுக்கரை பகுதி மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.

இந்த காட்டு யானையால் அப்பகுதியை சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள், தங்களை அச்சுறுத்து வரும் ஒற்றை காட்டு யானையை 'என்கவுன்ட்டர்' என அழைத்து வந்தனர். மேலும், என்கவுன்ட்டர் யானையை பிடித்து, காட்டுப் பகுதியில் விட்டுவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து இந்த யானையை பிடிக்க தமிழக அரசு வனத்துறைக்கு உத்தரவிட்டது. அரசின் உத்தரவையடுத்து, இந்த சேட்டைக்கார யானையைப் பிடிக்கும் நடவடிக்கைக்கு 'மிஷன் மதுக்கரை மகாராஜ்' என பெயரிட்டு 'என்கவுன்ட்டர்' யானையை பிடிக்க வனத்துறை ஊழியர்கள் திட்டம் தீட்டினர்.
4 கும்கி யானைகள் உதவியுடன் யானையை பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சாடிவயல் கும்கி முகாமில் உள்ள பாரி, சுஜய் மற்றும் டாப்சிலிப் யானைகள் முகாம் கும்கி கலீம், முதுமலை புலிகள் சரணாலயத்தில் இருந்து கும்கி விஜய் ஆகியவை வரவழைக்கப்பட்டன.
இதையடுத்து வனத்துறையினர் கும்கி யானைகளின் உதவியுடன் லவகாமாக மகாராஜ் யானையை சுற்றிவளைத்து மயக்க ஊசி செலுத்தி நேற்று முன்தினம் பிடித்தனர். பின்னர் அந்த யானையை பொள்ளாட்சி வரகழியாறு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில்
வரகழியாறில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த மகராஜ் யானை உயிரிழந்தாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications