தினகரன் வாரியிறைக்கும் பணம் எல்லாம் ஜெ.விடம் கொள்ளையடித்தது.. மதுசூதனன் ஆவேசம்
மறைந்த ஜெயலலிதாவை ஏமாற்றிக் கொள்ளையடித்த பணம்தான் ஆர்.கே நகர் தொகுதியில் வீதிக்கு வந்திருக்கிறது என்று அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் தினகரனை அடித்து தாக்கினார்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அங்கு போட்டியிடும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டதால் ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை விளக்கும் சசிகலா தரப்புக்கு தொப்பியும் வழங்கப்பட்டுள்ளது. மக்களிடையே தங்களின் சின்னத்தை அடையாளப்படுத்தும் வகையில் இருக்கட்சியினரும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதுசூதனன் அவரது ஆதரவாளர்களிடம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: சசிகலா குடும்பத்திற்கு இவ்வளவு சொத்து எங்கிருந்து வந்தது? ஜெயலலிதாவை ஏமாற்றி கொள்ளையடித்த பணம்தான் இவ்வளவும்.
இந்த கொள்ளை ரகசியம் தெரிந்ததால்தான் ஜெயலலிதா சசிகலா கும்பலை வெளியேற்றினார். வெளியேற்றிய பின்னர் சசிகலா மட்டும் மன்னிப்பு கடிதத்தை கொடுத்து விட்டு திரும்ப வந்தார். அதன் பின்னர் இந்தக் குடும்பம் எல்லாவற்றையும் பிளான் பண்ணி செய்துவிட்டது.
தினகரன் குடும்பம் செய்தது அனைத்தும் திட்டமிட்ட கொள்ளைதான். அந்தக் கொள்ளைப் பணம்தான் ஆர்.கே. நகர் வீதிக்கு வந்திருக்கிறது என்று கடுமையாக குற்றம்சாட்டினார். அபோது முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உடன் இருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications