சென்னையில் டோணி.. ரஜினியை சந்திக்கிறார்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் திரும்பியுள்ள மகேந்திர சிங் டோணி இன்று இரவு சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை சந்திக்கிறார்.
Recommended Video

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் திரும்பியுள்ள கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோணி இன்று சென்னை வந்துள்ளார். சென்னை அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி என்று குஷியாக தெரிவித்துள்ள அவர் இன்று இரவு போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த 2 ஆண்டுகளாக சூதாட்ட புகார் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடையானது இந்த ஆண்டோடு முடியும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கிறது. அணிக்கு டோணி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் திரும்பியுள்ளதால் சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் டோணி இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னைக்கு திரும்புவது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக டோணி மகிழ்ச்சி தெரிவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வினை ஏலத்தில் எடுக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் டோணி கூறினார்.
இதனிடையே சென்னை வந்துள்ள டோணி இன்று இரவு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியை அவரது வீட்டில் சந்திக்க உள்ளார். டோணி அன்டோல்டு ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியான சமயத்தில் டோணி ரஜினியை சந்தித்திருந்த நிலையில், இன்று மீண்டும் ரஜினியை சந்திக்கிறார் டோணி. டோணி ரஜினியின் சந்திப்பு இரண்டு தரப்பு ரசிகர்களையும் குஷியாக்கியுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications