ஆளுநருடன் ஓபிஎஸ் அணி மைத்ரேயன் எம்பி திடீர் சந்திப்பு
யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்து ஆளுநர் வித்யாசகர் ராவ் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் முதல்வர் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்.பி. இன்று ஆளுநரை திடீரென சந்தித்து பேசினார்.
சென்னை: ஆளுநர் வித்யாசகர் ராவை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் திடீரென இன்று சந்தித்து பேசினார்.
முதல்வர் ஓபிஎஸ் மற்றும் சசிகலா தலைமையில் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. முதல்வர் ஓபிஎஸ் தமக்கு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதி தர வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல் சசிகலாவோ தமக்கே அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு முழுமையாக உள்ளது; தம்மையே ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அத்துடன் 90 அதிமுக எம்.எல்.ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைத்துள்ளார் சசிகலா.
மேலும் ஆட்சி அமைக்க தம்மை அழைக்காவிட்டால் பொறுமையாக இருக்க முடியாது என ஆளுநரை மிரட்டி நெருக்கடி கொடுத்து வருகிறார் சசிகலா. இருப்பினும் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வர உள்ளதால் ஆளுநர் தற்போது எந்த முடிவும் எடுக்காமல் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதனிடையே ஆளுநர் வித்யாசகர் ராவை அதிமுக ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் இன்று திடீரென சந்தித்து பேசினார். முதல்வர் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர் மைத்ரேயன். முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அளித்த தகவல்களை நேரில் தெரிவிக்கவே மைத்ரேயன் ஆளுநர் வித்யாசகர் ராவை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications