150 தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டணி வெல்லும்!- வைகோ பேச்சு
திருச்சி: வரும் தேர்தலில் 150 தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டணி வென்று ஆட்சியைப் பிடிக்கும் என அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்தார்.
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- த.மா.கா. சார்பில் திருச்சியில் புதன்கிழமை தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில் அக்கூட்டணியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டு மேடையில் வாக்களிக்க பணம் தரமாட்டோம், பணம் வாங்கவும் மாட்டோம் என்ற உறுதிமொழியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூற, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் திரும்பக் கூறி ஏற்றுக் கொண்டனர்.

மாநாட்டில் வைகோ பேசுகையில், "தமிழகத்தில் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 1.38 கோடியாகும். இதில் 1.20 கோடி வாக்காளர்களின் வாக்கு எங்கள் அணிக்குத்தான்.
இந்தத் தேர்தலில் எங்கள் கூட்டணி 150 தொகுதிகளில் வெற்றி பெறும். விவசாயிகளின் துயரத்தைப் போக்கும் சக்தி கொண்ட எங்களது கூட்டணிக்குத்தான் விவசாய சங்கங்களின் ஒட்டுமொத்த ஆதரவு கிடைத்திருக்கிறது.
ஆந்திர மாநிலத்தில் 92 சதவீதம், தெலங்கானாவில் 89.9 சதவீதம் விவசாயிகள் கடனாளிகளாக இருக்கின்றனர். தமிழகத்தில் 82 சதவீதம் விவசாயிகள் கடனாளியாக உள்ளனர். அவ்விரு மாநில அரசுகளும் கடன்களைத் தள்ளுபடி செய்யும்போது, ஏன் தமிழகத்தில் செய்ய முடியாதா?
விஜயகாந்த் தலைமையிலான அரசு அமையும் போது நாங்கள் விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வோம். இளைஞர்கள் தங்களது பெற்றோர்களிடம் கூறி மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக-தமாகாவுக்கு வாக்களிக்க கூறுங்கள். ஜனநாயக புரட்சி. மௌனப் புரட்சியை நிகழ்த்த போவது இளைஞர்கள் சக்திதான்," என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications