எங்களோடு இணைகிறார் முருகவேல் ராஜன்... ஜி.கே.வாசன்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மக்கள் விடுதலை கட்சித் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான முருகவேல்ராஜன் தமிழ் மாநில காங்கிரஸில் இணையவுள்ளதாக அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், ஏப்ரல் 14ம் தேதி, டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளன்று முருகேவல்ராஜன், தமாகாவில் இணைவார்.

அடுத்த 3 நாட்களில் தமாகாவின் பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்படுிகறது. அப்போது கட்சியின் உறுப்பினர் நிலவரம் குறித்து விவரிக்கப்படும் என்றார் வாசன்.
முருகவேல்ராஜன் மதுரையைச் சேர்ந்த தலித் தலைவர் ஆவார். தனிக் கட்சி நடத்தி வரும் அவர் முன்பு பாமகவில் இருந்தவர் என்பது நினைவிருக்கலாம். ஆனால் தன்னிடம் பாமகவினர் ஜாதி துவேஷத்துடன் நடந்து கொள்வதாக கூறி கட்சியை விட்டு வெளியேறி தனிக் கட்சி கண்டார்.












Click it and Unblock the Notifications