நோபல் பரிசு: 99 ஆண்டு கால சாதனையை முறியடித்த மலாலா
சென்னை: இளம் வயதில் நோபல் பரிசு பெறுபவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய்.
2014ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை டெல்லியைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்தியுடன் சேர்ந்து 17 வயதே ஆகும் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்சாய் பெறுகிறார்.
இதன் மூலம் மலாலா புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

இளம் வயதில்
17 வயதில் அதாவது இவ்வளவு இளம் வயதில் நோபல் பரிசு பெறும் முதல் நபர் மலாலா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிராக்
ஆஸ்திரேலியாவில் பிறந்த இங்கிலாந்து இயற்பியலாளரான வில்லியம் லாரன்ஸ் பிராக் எக்ஸ் ரே மூலம் கிரிஸ்டல் உருவத்தை ஆய்வு செய்ததற்காக தனது தந்தை வில்லியம் ஹென்றி பிராகுடன் சேர்ந்து தனது 25 வயதில் நோபல் பரிசு பெற்றார்.

1915
தனது 25வது வயதில் கடந்த 1915ம் ஆண்டு பிராக் இயற்பியலுக்கான நோபல் பரிசை பெற்றார். பிராக் தான் இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையை முதன்முதலில் பெற்றார்.

முறியடிப்பு
பிராகின் 99 ஆண்டு கால சாதனையை மலாலா இன்று முறியடித்துள்ளார்.

முதியவர்
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் பிறந்த பொருளாதார நிபுணர் லியோனிட் ஹர்விச் தனது 90வது வயதில் நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெற்ற மிகவும் வயதானவர் ஹர்விச் தான்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications