தமிழக மாநில தேர்தல் ஆணையராக மாலிக் ஃபெரோஸ்கான் பொறுப்பேற்பு
மாநில தேர்தல் ஆணையராக மாலிக் ஃபெரோஸ்கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்
சென்னை: மாநில தேர்தல் ஆணையராக இருந்த சீத்தாராமன் ஓய்வு பெற்றதை அடுத்து அவரது காலி இடத்தை நிரப்பும் வகையில் புதிய தேர்தல் ஆணையராக மாலிக் ஃபெரோஸ்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை மே 14ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால் மாநில தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் மாநில தேர்தல் ஆணையராக இருந்த சீத்தாராமன் கடந்த மாதம் ஓய்வு பெற்றதை அடுத்து மாநில தேர்தல் ஆணையர் பதவி காலியானது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் சிக்கல் உருவானது.
இந்த நிலையில் புதிய தேர்தல் ஆணையராக மாலிக் ஃபெரோஸ்கான் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று மாநில தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழக ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக பணியாற்றி கடந்த 2014ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற மாலிக் பெரோஸ்கான் தற்போது தேர்தல் ஆணையராக மீண்டும் பணிக்கு திரும்புகிறார்.
மாலிக் ஃபெரோஸ்கான் ஏற்கெனவே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார். அதேபோல், பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றியுள்ளார். முக்கியமாக, உள்ளாட்சித் துறையிலும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் ஃபெரோஸ்கான். இவர் இன்று சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு ஃபெரோஸ்கானுக்கு உள்ளது. அறிவிப்பானை வெளியிடுவாரா ஃபெரோஸ்கான்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையம் மாலிக் ஃபொரோஸ்கானுக்கு ஆணையத்தின் செயலாளர் தா. கு. ராஜசேகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
•1991 ஐ ஏ எஸ் ஆக முதலில் பணியில் இணைந்தார்.
•பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை செயலாளர்.
•கைத்தறித்துறை ஆணையர்.
•விலங்குகள் நல்லா ஆணையர்.
•தொழில்துறை இணைச்செயலர்.
•ஊரகவளரச்சி சிறப்புச்செயலர்.
•சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர்.
•31-3-14 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணி ஓய்வு.
•தற்போது மாநிலத் தேர்தல் ஆணையர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications