பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி காலமானார் !!
சென்னை: பிரபல தொழிலதிபரும், முன்னாள் எம்.பியுமான எம்.ஏ.எம். ராமசாமி உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
103 ஆண்டு கால பாரம்பரியம் மிகுந்த செட்டிநாடு சாம்ராஜ்யத்தை நிர்வகித்து வந்தவர் ராமசாமி. 84 வயதான அவருக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடைய நிலைமை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்ததது. இந்நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேறமும் ஏற்படாததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செட்டிநாடு அரண்மனை முதல் குதிரைப் பந்தயம் வரை ராமசாமி தொடாத துறை இல்லை. ஜாம்பவானாக திகழ்ந்து வந்த அவர் கர்நாடகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சமீப காலமாக ராமசாமியைச் சுற்றிலும் சர்ச்சைகளும் வெடித்தன.
தனது வளர்ப்பு மகனான எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவை இனிமேல் எனக்கு இவர் பிள்ளையே இல்லை என்று அறிவித்தார் ராமசாமி. மேலும் ஸ்பிக் நிறுவன தலைவர் ஏசி முத்தையாவே செட்டிநாடு சாம்ராஜ்யத்தை கவனித்துக் கொள்வார் என்றும் அறிவித்திருந்தார். 2012 ம் ஆண்டு "போர்பஸ்' வெளியிட்ட இந்தியாவின் 100 பணக்காரர்களில், இவர் 88வது இடம் பெற்றிருந்தார். அப்போது இவரது குடும்ப சொத்து மதிப்பு 4,300 கோடி என்பது நினைவிருக்கலாம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications