தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி கவலைக்கிடம்
சென்னை: பிரபல தொழிலதிபரும், முன்னாள் எம்.பியுமான எம்.ஏ.எம். ராமசாமியின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடலில் பல்வேறு கோளாறுகள் இருப்பதால் அவரது நிலை மோசமாகி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
103 ஆண்டு கால பாரம்பரியம் மிகுந்த செட்டிநாடு சாம்ராஜ்யத்தை நிர்வகித்து வருகிறார் ராமசாமி. 84 வயதான அவருக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய நிலைமை கவலைக்கிடமாகியுள்ளதைத் தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

சனிக்கிழமை முதல் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. கல்லீரல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிறுநீரகங்கள் தற்போது செயலிழந்துள்ளன. கல்லூரிலும் சேதமடைந்துள்ளது. உடல் நிலையில் முன்னேறமும் ஏற்படவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
வயோதிகமும் கூட சேர்ந்துள்ளதால் அவரது நிலை கவலைக்கிடமாகியுள்ளது. செட்டிநாடு அரண்மனை முதல் குதிரைப் பந்தயம் வரை ராமசாமி தொடாத துறை இல்லை. ஜாம்பவானாக திகழ்ந்து வந்த அவர் கர்நாடகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
சமீப காலமாக ராமசாமியைச் சுற்றிலும் சர்ச்சைகளும் வெடித்தன. தனது வளர்ப்பு மகனான எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவை இனிமேல் எனக்கு இவர் பிள்ளையே இல்லை என்று அறிவித்தார் ராமசாமி. மேலும் ஸ்பிக் நிறுவன தலைவர் ஏசி முத்தையாவே செட்டிநாடு சாம்ராஜ்யத்தை கவனித்துக் கொள்வார் என்றும் அறிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications