கருணாநிதியை சந்திக்க விரும்புகிறேன்... கனிமொழியிடம் மமதா
திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க விரைவில் தமிழகம் வருகை தருகிறார் மமதா பானர்ஜி.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க விரும்புவதாக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியிடம் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு எதிராக வலிமையான கூட்டணியை உருவாக்குவதில் மமதா பானர்ஜி மிகத் தீவிரமாக இருக்கிறார். டெல்லியில் முகாமிட்டுள்ள மமதா பானர்ஜி பாஜகவுக்கு எதிரான அத்தனை கட்சித் தலைவர்களையும் அடுத்தடுத்து சந்தித்து வருகிறார்.

திமுகவின் ராஜ்யசபா எம்.பி. கனிமொழியையும் மமதா பானர்ஜி நேற்று சந்தித்து பேசினார். அப்போது பாஜக- காங்கிரஸுக்கு மாற்றாக 3-வது அணி அமைப்பது குறித்து ஸ்டாலினுடன் ஏற்கனவே தாம் பேசியதை மமதா நினைவு கூர்ந்தார்.
தற்போது காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள திமுகவின் நிலைப்பாடு குறித்தும் மமதா கேட்டார். இந்த பேச்சுவார்த்தையின் போது தீவிர அரசியலில் இருந்து முதுமையால் ஓய்வில் இருக்கும் கருணாநிதியை தாம் சந்திக்க விரும்புவதாகவும் மமதா தெரிவித்துள்ளார்.
கருணாநிதி தற்போது நலமுடன் இருப்பதால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்... செயல் தலைவர் ஸ்டாலினிடம் இது பற்றி பேசுகிறேன் என பதிலளித்திருக்கிறார் கனிமொழி. இதனால் விரைவில் கருணாநிதியை சந்திக்க மமதா பானர்ஜி சென்னை வரக் கூடும் என கூறப்படுகிறது.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications