டிவி லைவ் ஷோவில் ஜெ., விஜயதாரணி எம்.எல்.ஏவை அசிங்கமாக திட்டிய தமிழாசிரியர் கைது
சென்னை: சத்தியம் டிவி லைவ் ஷோவின்போது முதல்வர் ஜெயலலிதா, காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ விஜயதாரணி ஆகியோரை அசிங்கமாக திட்டிப் பேசிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் தமிழாசிரியர் என்பது தெரிய வந்துள்ளது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு இது. முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவரையும் பூங்காவையும் இடித்த நாளன்று இரவு, சத்தியம் டிவியில் ஒரு நேரலை நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
அந்த நிகழ்ச்சியின்போது தொலைபேசியில் கருத்துச் சொன்ன தமிழ்தாசன் என்ற நபர் முதல்வர் ஜெயலலிதாவையும், விஜயதாரணி எம்.எல்.ஏவையும் மிகவும் அசிங்கமாக பேசியதால் பெரும் பரபரப்பாகி விட்டது.

சத்தியம் டிவியின் சர்ச்சை ஒளிபரப்பு
சத்தியம் டிவியில் சத்தியம் சாத்தியம் என்ற பெயரில், அன்றைய தினம் நடந்த நேரலையின்போது காங்கிரஸ் சார்பில் விஜயதாரணியும், பாஜக சார்பில் எஸ்.ஆர்.சேகர் என்பவரும் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் முற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்தனர்.

லைனில் வந்த தமிழ்தாசன்
இருவரும் தத்தமது கருத்துக்களைக் கூறி வந்தனர். நிகழ்ச்சியின் முடிவில், தமிழ்தாசன் என்பவர் தொலைபேசி மூலம் தனது கருத்துக்களைக் கூற வந்தார்.

அசிங்கமாகத் திட்டினார்
முள்ளிவாய்க்கால் முற்றம் சுவர் இடிப்பு தொடர்பாக அவர் கருத்து தெரிவித்தபோது திடீரென முதல்வர் ஜெயலலிதாவையும், விஜயதாரணியையும் அசிங்கமாகத் திட்டினார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆவேசமடைந்த விஜயதாரணி
தமிழ்தாசனின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் விஜயதாரணி. கோபாவேசமாக அவர் அந்த நபர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், முதல்வரையும், தன்னையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார். மேலும் சத்தியம் டிவி அந்த நபரைப் பேச அனுமதித்ததற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

விரைந்தது போலீஸ்
இந்த பரபரப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து சத்தியம் டிவி உரிமையாளர்கள் மோகன் சி லாசரஸ் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு காவல்துறை அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தமிழ்தாசன் கைது
மேலும் தமிழ்தாசன் மீது போலீஸார் வழக்கும் பதிவு செய்தனர். அவரது தொலைபேசி எண்ணை வைத்து அவரை அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டது. அதில் அவர் ராமநாதபுரத்திலிருந்து பேசியது தெரிய வந்தது.

ராமநாதபுரத்தில் வைத்துக் கைது
தமிழ்தாசனை சென்னை மந்தைவெளியில் வைத்துப் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீ்ழ் வழக்குப் போடப்பட்டுள்ளது.

சத்தியம் டிவி ஆசிரியர் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து முன்னதாக விளக்கம் அளித்த சத்தியம் டிவி செய்தி ஆசிரியர் விஜயரங்கம் கூறுகையில், சம்பந்தப்பட்ட நபர் தன்னை தமிழ் ஆர்வலர் என்றும், மதிமுகவைச் சேர்ந்தவர் என்றும், தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார். ஆரம்பத்தில் நன்றாகத்தான் பேசினார். எனவே அவரது அழைப்பை லைவாக ஒலிபரப்பினோம். ஆனால் பின்னர் அவர் மோசமாக பேசத் தொடங்கியதால் அவரது அழைப்பை துண்டித்து விட்டோம் என்றார்.

பள்ளி ஆசிரியர்
தமிழ்தாசனுக்கு 45 வயதாகிறது. இவர் எம்.ஏ. பி.எட் படித்துள்ளார். தமிழாசிரியராக இருக்கிறார். சாந்தோம் பள்ளியில் பணியாற்றுகிறார். இவரது மனைவி பெயர் ஸ்டெல்லா. இவர்களுக்கு யாழினி என்ற 8 வயது மகள் இருக்கிறார். தமிழ்தாசன் தமிழ் மீது தீவிர பற்று கொண்டவர். மதிமுக. அனுதாபி ஆவார். சொந்த ஊர் ராமநாதபுரம் அருகேயுள்ள ஆர்.எஸ்.மங்கலம் ஆகும். குடிபோதையில் தெரியாமல் பேசிவிட்டதாகவும், தன்னை மன்னித்து விட்டு விடும் படியும் தமிழ்தாசன் போலீசிடம் கூறினார். ஆனால் போலீசார் அதை ஏற்க மறுத்து சட்டப்படி நடவடிக்கை எடுத்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications