பொங்கல் கொண்டாட்டத்துக்காக பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி – இளைஞர் கைது
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் பொங்கல் பண்டிகைக்காக பெண்ணிடம் நகை பறிக்க முயற்சித்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று மாலை 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். அந்த வாலிபருடன் அந்த பெண் போராடினார்.

எனினும் 1.5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அந்த வாலிபர் ஓட்டம் பிடித்தார். பதறிப்போன அந்த பெண் உடனடியாக சத்தம் போட்டார். இதையடுத்து சாலையில் சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அந்த வாலிபரை விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து அந்த வாலிபரை திருவல்லிக்கேணி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட வாலிபர் பெயர் ரவி என்பதும், திருவொற்றியூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த இவர் பட்டாபிராமில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்து வருவதும் தெரியவந்தது.
பொங்கல் பண்டிகையை தன்னுடைய நண்பர்களுடன் ஜாலியாக கொண்டாடுவதற்கு பணம் இல்லாததால் நகைப்பறிப்பில் ஈடுபட்டதாக ரவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications