சென்னை ஹோட்டல் பார்ட்டிக்கு சப்ளை.. 'பாம்பு விஷ' போதை மருந்துடன் நள்ளிரவில் சிக்கிய உ.பி. இளைஞர்
சென்னை: பாம்பு விஷம் கொண்ட போதை பொருளுடன் வட மாநில இளைஞர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் போதை மருந்து நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல்களையடுத்து, நேற்று இரவு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
திருவான்மியூர் பஸ் டெப்போ அருகே சந்தேகப்படும்படியாக வந்த ஒரு காரை போலீசார் வழிமறித்து சோதனையிட்டனர். இதையடுத்து அந்தக் காரில் இருந்து சிலர் தப்பி ஓடிவிட்டனர்.

நட்சத்திர ஓட்டல் பார்ட்டி
ஆனால் நிஷால் திவாரி என்ற ஒரு இளைஞர் மட்டும் பிடிபட்டார். இவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். அவரிடம் இருந்து ஏராளமான போதை மருந்துகள் மற்றும் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இந்த மாத்திரைகள் எந்த வகையை சேர்ந்தவை என்பது காவல்துறையினருக்கு உறுதியாக தெரியவில்லை. சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் நடன விருந்தில் பங்கேற்க வந்தவர்களுக்கு இவற்றை சப்ளை செய்ய கொண்டு வந்ததாக திவாரி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்கு அனுப்பி வைப்பு
இந்த போதை மருந்துகளில், பாம்பு விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. எனவே கைப்பற்றப்பட்ட போதை மருந்துகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. ஆய்வின் முடிவில் தான் அது பாம்பு விஷம் கலந்ததா என்பது தெரியவரும்.

அரிதான விஷயம்
பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே தெரிந்த விஷயம் என்றபோதிலும், தமிழகத்தைப் பொறுத்த அளவில் பாம்பு விஷம் கலந்த போதை மருந்து என்பது அரிதான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் திருவண்ணாமலையில் உள்ள விடுதியில், ரஷ்யாவை சேர்ந்த ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். உடல் பரிசோதனையில் அவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து உட்கொண்டதும், அதில் பாம்பு விஷம் கலக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஏன் பாம்பு விஷம்
அந்த விவகாரம் தொடர்பாக விடுதி உரிமையாளர் உள்ளிட்ட சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் இப்போது பாம்பு விஷம் கலக்கப்பட்ட தன்மை கொண்ட போதைமருந்து சென்னையில், சிக்கியுள்ளது. ஏழு மணி நேரம் முதல் ஒரு வாரம் வரை இந்த போதை இறங்காது. எனவே தான் பாம்பு விஷத்திற்கு அதிக கிராக்கி உள்ளது. அரைலிட்டர் பாம்பு விஷம் சர்வதேச சந்தை மதிப்பில் பல கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications