'ஜெ. பதவியேற்பு விழாவில் வெடிகுண்டுகள் வெடித்து சிதறும்..' போனில் மிரட்டிய நபர் கைது!
நாகர்கோவில்: ஜெயலலிதா பதவியேற்கும் விழாவில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தொலைபேசியில் மிரட்டல்விடுத்த ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
ரயில்வே ஹெல்ப்லைனுக்கு நேற்று இரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்கும் விழாவில் வெடிகுண்டுகள் வெடித்து சிதறும் என்று கூறி எச்சரிக்கும் தொனியில் பேசிவிட்டு போன் அழைப்பை கட் செய்துவிட்டார்.

இதனால், பரபரப்பான ரயில்வே ஹெல்ப்லைன் ஊழியர்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறை நடத்திய விசாரணையில், செல்போனில் இருந்து அந்த அழைப்பு வந்ததும், அது நாகர்கோவில்-கோட்டாறு பகுதியிலுள்ள சிவகுமாருடையது என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து நாகர்கோவில் போலீசார் அலர்ட் செய்யப்பட்டு, சிவகுமார் அலேக்காக கைது செய்யப்பட்டார். இவர் போட்டோகிராபராக வேலை பார்த்து வருகிறாராம். நேற்று இரவு டாஸ்மாக் போதை தலைக்கேறிய நிலையில், போன் போட்டு இப்படி உளறிக் கொட்டியுள்ளார் என்று போலீசாரின் முதல்கட்ட கவனித்தல்களுக்கு பிறகு தெரியவந்துள்ளது. மேலும் தொடர்ந்து போலீசார் உரிய வகையில் விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications