ஓடும் ரயிலில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குடிகாரன்: தர்ம அடி கொடுத்த பயணிகள்
சென்னை: ஓடும் ரயிலில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குடிகாரனை தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர் பயணிகள்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சத்யா (வயது 39, பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த ஞாயிறு தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூருக்கு சென்றார். அங்குள்ள முருகன் கோவிலில் தனது 2 பெண் குழந்தைகளுக்கும் மொட்டை போட்டு விட்டு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு புறப்பட்டார்.
இவர்கள் சி-3 என்ற பெட்டியில் பயணம் செய்தனர். இரவு நேரத்தில் சத்யா குடும்பத்தினர் ரயிலில் அயர்ந்து தூங்கினர். அருகில் அவருடைய 2 பெண் குழந்தைகளும் நன்கு தூங்கிக் கொண்டிருந்தனர். திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் விருத்தாசலம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது சத்யாவின் 5 வயது குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. உடனே தூக்கத்தில் இருந்து சத்யாவும் அதே பெட்டியில் பயணம் செய்த மற்ற பயணிகள் எழுந்தனர்.
அப்போது அந்த ரயிலில் பயணம் செய்த ஒருவர் அவசர, அவசரமாக கீழே இருந்து இறங்க முயன்றார். உடனே ரயில் பயணிகள் அனைவரும் அவரை சுற்றி வளைத்து மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த ஆசாமி, தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அனைவரும் ஓடும் ரயிலிலேயே அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
இதற்கிடையில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு அதிகாலை 4.15 மணிக்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து அவரை விழுப்புரம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த கோதண்டபாணி மகன் உதயகுமார் (40) என்றும் அதே பகுதியில் தனியார் அச்சகத்தில் ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. உதயகுமாருக்கு சொந்த ஊர் அரியலூர். அவர் அரியலூருக்கு வந்துவிட்டு மீண்டும் சென்னை செல்ல நெல்லை எக்ஸ்பிரசில் அரியலூரில் இருந்து ஏறியுள்ளார். ரயிலில் வைத்தே உதயகுமார் மது குடித்துள்ளார்.
பின்னர் போதை தலைக்கேறியதும் அதே பெட்டியில் பயணம் செய்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து விழுப்புரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர். பின்னர் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications