கோவையில் 8 மாத குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற பீகார் தொழிலாளி கைது
கோவை: பொள்ளாச்சியில் 8 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த பீகார் மாநில தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கொண்டைகவுண்டன் பாளையத்தில் பீகாரை சேர்ந்த ஒரு நபர் தனது குடும்பத்துடன் மில்லில் வேலை பார்ப்பதற்காக வந்துள்ளார். அவர்களுக்கு 2வயது குழந்தையும், 8 மாத குழந்தையும் உள்ளது. அவர்கள் அனைவரும் மில்லில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். அதே மில்லில் சஞ்சித் என்ற மற்றொரு பீகார் மாநில நபரும் வேலைசெய்து வந்தார்.

நேற்று மாலை கணவன்-மனைவி 2 பேரும் குழந்தைகளை வீட்டில் தூங்க வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் இரவு 8 மணியளவில் அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது குழந்தை 8 மாத குழந்தை உடல் முழுவதும் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் பதற்றத்துடன் குழந்தையை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது குழந்தை இறந்து விட்டது தெரியவந்தது. ஆரோக்கியமாக இருந்த குழந்தை திடீரென ரத்த வெள்ளத்தில் இறந்ததால் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது 8 மாத பெண் குழந்தையை யாரோ பாலியல் பலாத்காரம் செய்து இருக்கலாம் என்றும் அதனால் குழந்தை இறந்து இருக்கலாம் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து குழந்தையின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் குழந்தையின் பெற்றோர் வேலைப்பார்க்கும் தென்னை நார் தொழிற்சாலை பகுதிக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சஞ்சித், 22 என்ற வாலிபரை தவிர அனைவரும் அங்கு இருந்தனர். இதையடுத்து போலீசார் அந்த நபர் எங்கு என்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அந்த நபர் இரவு முதல் காணவில்லை என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசாருக்கு சஞ்சித் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை தேடினர். அப்போது அவர் ரயிலில் பீகார் செல்ல முடிவு செய்து பேருந்துக்குக்காக காத்திருந்தார். போலீசார் அவரை கை விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் தான் 8 மாத குழந்தை சரிதாவை பாலியல் பலாத்காரத்தில் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வீட்டில் இரவு குழந்தை தனியாக இருக்கும் போது நான் சென்றேன். பின்னர் ஒரு இடத்துக்கு குழந்தையை தூக்கி சென்று பலாத்காரம் செய்தேன். அப்போது வலி தாங்க முடியாமல் குழந்தை கதறி அழுதது. இதனால் எரிச்சல் அடைந்த நான் ஆத்திரத்தில் குழந்தையின் காலை பிடித்து கொண்டு தலையை தரையில் ஓங்கி அடித்தேன். இதில் குழந்தை ரத்த வெள்ளத்தில் இறந்தது. இதையடுத்து நான் குழந்தையை மீண்டும் இருந்த இடத்துக்கே கொண்டு போய் போட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டேன். தற்போது ஊருக்கு புறப்பட தயாரான போது தான் போலீசில் சிக்கி கொண்டதாக தெரிவித்தார்.
8 மாத கைக்குழந்தையை பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காமக்கொடூரன் ஒருவன் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications