2வதும் பெண் குழ்நதையா?... மருத்துவமனையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்த செல்வம்!
கடலூர்: கடலூர் மாவட்டம் வி. குமாரமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த செல்வம் என்ற 45 வயது நபர், தனது மனைவிக்கு 2வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் வேதனைப்பட்டு மருத்துவமனையிலேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பெண் குழந்தை பிறந்தால் வேதனைப்படும் பத்தாம்பசலித்தனம் இன்னும் சமூகத்தை வாட்டி வதைத்துக் கொண்டுதான் இருக்கிறது. என்னதான் அரசும், சமூக அமைப்புகளும் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், பெண் குழந்தைகளின் நலனுக்காக அரசுகள் எத்தனை திட்டங்களைத் தீட்டினாலும் பெண் குழந்தைகளை வெறுக்கும் மூடர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவராக செல்வம் சேர்ந்துள்ளார். அதுவும் தனது மனைவிக்கு 2வதும் பெண்ணாக பிறந்ததால், அவரை பிரசவத்திற்காக சேர்த்த மருத்துவமனை வளாகத்திலேயே அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்வத்தின் மனைவி பெயர் பானுமதி. இவருக்கு 38 வயதாகிறது. இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே திருமணமாகி விட்டது. ஆனால் நீண்ட காலமாக குழந்தைப் பாக்கியமே இல்லாமல் இருந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்புதான் பானுமதி கர்ப்பம் தரித்தார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் தற்போது 2வது முறையாக கர்ப்பமானார் பானுமதி. இதையடுத்து அவரை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தனர்.
அங்கு வெள்ளிக்கிழமையன்று பானுமதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையறிந்து செல்வம் மனம் உடைந்து போய் விட்டாராம். மீண்டும் பெண் குழந்தை பிறந்து விட்டதே என்று புலம்பிய அவர், மருத்துவமனை வராண்டாவில் உள்ள ஜன்னலில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications