குற்றால அருவி வெள்ளத்தில் சிக்கி இறந்த மதுரை நபர் உடல் மீட்பு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையின் காரணமாக தென்காசி,செங்கோட்டை,கடையநல்லூர்,உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் அருவி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு தென்காசி,குற்றாலம் பகுதிகளில் பலத்த மழை சுமார் மணி நேரம் நீடித்தது.இம்மழையின் காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

அப்போது 100க்கும் மேற்பட்டோர் மற்றும் மதுரையை சார்ந்த 4 பேர் குளித்துக் கொண்டிருந்தனர்.தண்ணீர் அருவியில் அதிகமாக கொட்டுவதை அறிந்த அனைவரும் அருவியை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
இதில் மதுரையை சார்ந்த ஆத்மாராவ் என்பவர் அருவி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.இதுக் குறித்து தகவல் அறிந்த குற்றாலம் காவல்துறையினர் விரைந்து வந்து அருவிப் பகுதியில் அதிக பவர் கொண்ட விளக்கு மூலம் அவரை தேடினர்.பின்னர் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து அவரைத் தேடினர்.

அவரது உடலோ எதுவும் கிடைக்க வில்லை இதுகுறித்து தென்காசி கோட்டாட்சியர் வெங்கடேஷ் அப்பகுதிக்கு விரைந்து வந்து காவல்துறையினர்,தீயணைப்புத் துறையினர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.இரவு நேரமாதலாலும், அருவியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்ப்பட்டது.
இன்று காலை தென்காசி,செங்கோட்டை தீயணைப்புத் துறையினர் தீவீர தேடுதல் நடத்தினர்.அப்போது அவரது உடல் குற்றால நாதர் ஆலயத்தின் அருகில் உள்ள பாலத்தின் கீழ் செடிகளுக்குள் பிணமாக கிடந்தார்.அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி மாவட்ட மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ஆத்மா ராவ் குடும்பத்தினர் கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications