ஒரு தலைக் காதல் விபரீதம் - காதலித்த பெண்ணின் வீட்டிலேயே வாலிபர் தற்கொலை
ஆவடி: சென்னை ஆவடியில் காதலிக்க மறுத்த பெண் வீட்டில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி ஜீவானந்தம் நகர் 2 ஆவது தெருவை சேர்ந்தவர் பாலையா. இவரது உறவினர் கார்த்திக். இவர் ஒரு லாரி டிரைவர். இவரது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகே தென்திருப்பேரை கிராமம்.

கார்த்திக் தன்னுடைய எதிர்வீட்டு பெண்ணை ஒருதலையாக காதலித்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அந்த பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, கார்த்திக் அத்துமீறி நுழைந்து அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். அவர் மறுத்த நிலையில் திடீரென்று அந்தப் பெண்ணின் வீட்டு படுக்கையறைக்கு சென்ற கார்த்திக், வீட்டின் உத்திரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதைப் பார்த்த அந்த பெண் அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்ப்பதற்குள் கார்த்திக் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் கிடைத்து, ஆவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கார்த்திக் உடலை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications