தண்டவாளத்தில் நின்று சண்டை... ரயில் மோதி இளைஞர் பலி... பெண் காயம்... மருத்துவமனையிலிருந்து மாயம்!
சென்னை: சென்னையில் தண்டவாளத்தில் நின்று சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவர் மீது மின்சார ரயில் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞர் பலியானார். அவருடன் சண்டை போட்ட பெண் காயமடைந்தார்.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரும்புலியூர் செல்லும் வழியில் நேற்று முன்தினம் இரவு தண்டவாளத்தில் நின்றபடி ஒரு இளைஞரும், 30 வயதுடைய பெண்ணும் சண்டை போட் டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கடற்கரையில் இருந்து செங்கல் பட்டு செல்லும் ரயில் அவர்கள் மீது மோதியது.
இதில், சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். தலையில் காயமடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்த பெண்ணின் செல்போன் மூலம் அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதேபோல், இறந்தவரின் பர்ஸில் இருந்த முகவரியை வைத்து அவர் தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பாஸ்கர் (26) என்பது தெரிந்தது.
இதற்கிடையே, சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் திடீரென மாயமானார்.
பாஸ்கருக்கும் அந்தப் பெண்ணுக்கும் என்ன பிரச்சினை, எதற்காக அவர்கள் தண்டவாளத்தில் நின்று சண்டை போட்டனர் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக தலைமறைவான அப்பெண்ணையும் போலீசார் தேடி வருகின் றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications