திருக்கோவிலூர் அருகே பரிதாபம்: தொண்டையில் மீன் சிக்கி தொழிலாளி பலி!
தொண்டையில் மீன் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம்: தொண்டையில் மீன் முள் சிக்கும். ஆனால் முழு மீன் சிக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று திருக்கோவிலூர் அருகே நிகழ்ந்துள்ளது.
திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமம் அருங்குறிக்கை. இந்த கிராமத்தில் வசிக்கும் அண்ணாமலை என்பவர் அருகிலுள்ள சித்தலிங்கமடம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்க சென்றார். தூண்டிலில் மீன்பிடித்தபோது ஒரு மீன் சிக்கியது. அதை எடுக்க முயன்று மீன் அவர் கையில் வரவில்லை. இதனால் வாயால் கவ்விப்பிடித்து, தூண்டில் முள்ளை எடுக்க முயன்றார்.

அப்போது திடீரென்று அண்ணாமலை, வாயில் கவ்விய மீனை திடீரென்று விழுங்கிவிட்டார். இதில் தொண்டையில் மீன் சிக்கி கொண்டது. இதனால் அண்ணாமலைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி சரிந்தார். இதனை கண்ட அங்கிருந்தோர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொண்டையில் சிக்கிய மீனை டாக்டர்கள் எடுக்க முயன்றும் அண்ணாமலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications