மகளின் சான்றிதழ்களை மீட்க முயற்சித்து வெள்ளத்தில் மூழ்கி பலியான தந்தை
சென்னை: சென்னையில் வெள்ளத்தில் மிதந்த வீட்டில் இருந்து தனது மகளின் சான்றிதழ்களை எடுக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி பலியானார்.
சென்னை கிரீம்ஸ் சாலை அருகே உள்ள திடீர் நகரைச் சேர்ந்தவர் எம். ரவீந்திரன்(39). தனியார் கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் அவரது வீடும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் குடும்பத்துடன் மீட்கப்பட்டு வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டார்.
Man drowns while trying to save daughter’s certificates #ChennaiFloods
https://t.co/O4I75kQTMB pic.twitter.com/t0XSfvrpFn
— The Hindu (@TheHindu) December 6, 2015 வியாழக்கிழமை மாலை அவர் தனது மகளின் பள்ளி சான்றிதழ்கள் மற்றும் ரேஷன் அட்டயை தேடி எடுத்து வர வீட்டிற்கு சென்றார். அப்போது அவர் வெள்ள நீரில் மூழ்கி பலியானார். மறுநாள் காலை அவரது உடல் மிதந்து வந்ததை அவரது உறவினர்கள் பார்த்து கதறி அழுதனர்.
இந்நிலையில் சனிக்கிழமை திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த பலர் தங்கள் வீடுகளுக்கு சென்று வங்கி பாஸ்புக், ஆவணங்கள், சான்றிதழ்கள், படுக்கை, உடை ஆகியவற்றை எடுத்து வந்து காய வைக்க முயன்றனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் கூறுகையில்,
இதுவரை அரசு எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. கல்லூரி மாணவர்கள் வந்து தான் எங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறார்கள். வெள்ளம் எங்கள் வீடுகளுக்குள் புகுந்து அனைத்தையும் அடித்துச் சென்றுவிட்டது. எங்களை படகில் மீ்ட்கையில் வீட்டிற்குள் மார்பளவு நீர் இருந்தது என்றார்.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications