'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்... போலீசில் புகார் செய்த கணவர்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: மிஸ்டு கால் ஒன்றின் மூலம் பழக்கமான திருமணமான ஆணும், பெண்ணும் தங்களின் துணைகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு மிஸ் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள குன்னத்தூரில் உள்ள கிரானைட் கல் அறுக்கும் கம்பெனியில் பணி புரிபவர் பழனிச்சாமி (வயது 27). இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு ஒரு மாத கைக்குழந்தை உள்ளது. சந்தியா தற்போது தனது பெற்றோர் வீட்டில் உள்ளார்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு பழனிச்சாமியின் செல்போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்தது. அந்த செல்போன் எண்ணுக்கு பழனிச்சாமி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த செல்போனில் கிருஷ்ணகிரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஒசாலி என்ற இடத்தை சேர்ந்த முனிரத்தினம் (26) என்ற பெண் பேசினார்.

முதலில் சகஜமாக பேசிய முனிரத்தினமும், பழனிச்சாமியும் பின்னர் தொடர்ச்சியாக ஒருவருக்கொருவர் சகஜமாக செல்போனில் பேச ஆரம்பித்தனர். நாளடைவில் இந்த பழக்கம் ஒரு கட்டத்தில் காதலாக மாறியது.

முனிரத்தினத்துக்கு திருமணமாகி ஜெயக்குமார் என்ற கணவரும், 7 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஜெயக்குமார் பால் வியாபாரம் செய்துவருகிறார்.

எனினும் பழனிச்சாமியை நேரில் பார்க்காமலேயே கள்ளக்காதலை முனிரத்தினம் தொடர்ந்தார். கள்ளக்காதலனை நேரில் சந்திக்க முனிரத்தினம் விரும்பினார். குன்னத்தூரிலேயே தனி குடித்தனம் நடத்தலாம் என்று கூறி பழனிச்சாமியும் சம்மதம் தெரிவித்தார்.

காதல் ஜோடி எஸ்கேப்

இதைத் தொடர்ந்து முனிரத்தினம் தனது கணவர் மற்றும் மகன், மகளை தவிக்க விட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்பு குன்னத்தூருக்கு வந்தார். அங்கு பழனிச்சாமியும், முனிரத்தினமும் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தினர்.

கணவர் புகார்

இதற்கிடையே தனது மனைவியை காணவில்லை என்று ஜெயக்குமார் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முனிரத்தினத்தை தேடினர். அப்போது முனிரத்தினம் குன்னத்தூரில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பாலக்கோடு போலீசார் குன்னத்தூருக்கு வந்தனர். குன்னத்தூர் போலீசாரின் உதவியுடன் முனிரத்தினத்தை தேடினர்.

அப்போது முனிரத்தினமும், பழனிச்சாமியும் தனிக்குடித்தனம் நடத்துவது உறுதியானது. அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொள்வதை போலீசார் அறிந்தனர். ஆனால் அவர்கள் எங்கு தங்கி இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மிஸ்டுகால் ஒன்றின் மூலம் பழக்கமாகி கடைசியில் ஊரைவிட்டே மிஸ்ஆகி வந்த முனிரத்னம் பற்றி குன்னத்தூரில் பரபரப்பாக பேசப்படுகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+