மனைவி குடும்பத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மருமகன் - மாமியார் பலி... 6 பேர் படுகாயம்!
கடையநல்லூர்: நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்களை குடும்பத்தோடு கொளுத்திய மருமகனின் வெறிக்கு மாமியார் உயிரிழந்தார். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.
கடையநல்லூர் சொக்கம்பட்டி அருகே திருவேட்ட நல்லூர் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் மகள் முத்துராணி என்பவரை செங்கோட்டை அருகேயுள்ள வடகரை செந்தூர் பாண்டியன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

கணவன், மனைவி கருத்து வேறுபாட்டால் அம்மா வீட்டிற்கு திருவேட்ட நல்லூர் கிராமத்திற்கு முத்துராணி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை கையில் பெட்ரோல் கேனுடன் செந்தூர்பாண்டியன் அதிகாலை மனைவி வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதனை சந்தர்ப்பமாக கருதிய அவர் கதவின் இடைவெளி மற்றும் ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி தீயை பற்றவைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதில் முதல் அறையில் படுத்திருந்த அவரது மாமியார் லட்சுமி உடலில் தீப்பற்றி உடல் கருகியது.
வீடு பூட்டப்பட்டிருந்த சமயத்தில் தீ பற்றி எரிந்ததால் வீட்டுக்குள் இருந்த முத்துப்பிரியா,பூவையா, முத்துக்குமார், மாலதி மற்றும் பிரபு சுபாஸ்ரீ என்ற இரு குழந்தைகள் அலறினர். இவர்களது அலறலைக் கேட்ட அக்கம் பக்கத்தவர்கள் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களையும் காப்பாற்றினர். இதில் மாமியார் மட்டும் பலியானார்.
தீ காயத்துடன் தப்பிய முத்துப்பிரியா, பூவையா, முத்துக்குமார், மாலதி மற்றும் பிரபு சுபாஸ்ரீ ஆகியோர் நெல்லை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். சம்பவத்தை கேள்விப்பட்ட நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் விரைந்து வந்து நேரில் ஆய்வு செய்தார்.
இது குறித்து சொக்கம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வடகரையை சேர்ந்த செந்தூர் பாண்டியனை வலை வீசி தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications