கந்துவட்டி புகாரில் நடவடிக்கை எடுக்காத போலீஸ் - காவல் நிலையத்தில் தீக்குளித்த சென்னைவாசி!
சென்னை: சென்னையில் கந்துவட்டி கொடுமை குறித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதம் காட்டியதால் காவல் நிலைய வாளகத்திலேயே ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்துள்ள புழல் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான். இருசக்கர வாகன மெக்கானிக்கான இவர் கந்துவட்டி ஆட்களால் அடிக்கடி மிரட்டப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவர் சென்னை ஏழுகிணறு காவல் நிலையத்தில் தம்மை மிரட்டுபவர்கள் குறித்து புகார் அளித்ததாகவும், ஆனால் போலீசாரால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இதில் விரக்தியடைந்த ஷாஜகான் நேற்றிரவு ஏழுகிணறு காவல் நிலைய வளாகத்திலேயே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.அவரை காப்பாற்றிய போலீசார் , கீழப்பாக்கம் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
உடலில் 70 சதவீத தீக்காயங்கள் ஆழமாக இருப்பதால் அவரதுநிலை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார், தீக்குளிப்பு சம்பவம் தெருவில் நடைபெற்றது என்று தெரிவித்தனர். ஆனால், பொதுமக்களோ காவல் நிலையத்தினுள்ளேயே நடைபெற்றது என்று கூறியுள்ளனர். காவல் துறையினரின் அலட்சியத்தால் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications