Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் வடகிழக்கு மாநில பெண்ணுக்கு ஆபாச சைகை செய்த இளைஞர்கள்- அதிர்ச்சி வீடியோ!

சென்னையில் கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த பெண்ணிற்கு இளைஞர் ஒருவர் ஆபாச சைகை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னையில் வடகிழக்கு மாநில பெண்ணுக்கு ஆபாச சைகை செய்த இளைஞர்கள்- அதிர்ச்சி வீடியோ!

    சென்னை: கால்பந்து போட்டியை காண வந்த வடகிழக்கு மாநில பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட இளைஞரால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

    சென்னை ஜவஹர்லால் உள்விளையாட்டு அரங்கத்தில், கடந்த வியாழன் அன்று சென்னை எஃப்.சி மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்.சி அணிகள் இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.

    அப்போது பார்வையாளர் மாடத்தில் வரிசையாக வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் அமர்ந் திருந்தனர்.

    இளைஞர்கள் கலாட்டா

    இளைஞர்கள் கலாட்டா

    போட்டியை ரசித்து கொண்டிருந்த போது ஏராளமான இளைஞர்கள், அவர்களுக்கு முன்பாக நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

    கேமராவில் சிக்கினார்

    கேமராவில் சிக்கினார்

    அந்த இளைஞர்களில் பல நீல நிற ஆடையை அணிந்திருந்தனர். இதனை எதேச்சையாக விளையாட்டு மைதானத்தில் இருந்த கேமராவும் படம் பிடித்துள்ளது.

    அசிங்க செயல்

    திடீரென்று அந்த இளைஞர் ஒருவர் ஆபாசமான சைகையை பெண்ணிடம் காட்டினார். இதனால் அப்பெண் அதிர்ச்சி அடைந்தார். அவர்களுடன் அமர்ந்திருந்த நபர், அந்த இளைஞரை தடுக்க முயற்சித்தார்.

    ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ

    ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ

    பின்னர் அந்த இளைஞர் தனது பின்புறத்தை காட்டி, ஏதோ தவறான சைகை காட்டினார். இதையடுத்து அவரை அப்பெண் தள்ளிவிட்டார். உடனே அவரை, நண்பர்கள் அழைத்துச் சென்று விட்டனர். இந்த வீடியோ Indian Football Team- For World CUP என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

    ஜான் ஆப்ரஹாம் கண்டனம்

    இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து, கடும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன
    நார்த் ஈஸ்ட் எஃப்.சி அணியின் உரிமையாளரும், நடிகருமான ஜான் ஆப்ரஹாம் தனது மன உளைச்சலையும், கண்டனத்தையும் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். சென்னையில் வடகிழக்கு மாநில பெண்களிடம் அசிங்கமாக நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+