கள்ளக்காதலனுடன் உல்லாசம்... காளீஸ்வரியை கொன்றுவிட்டு தப்பிய கருப்பசாமி
விருதுநகர்: கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை போட்டுத்தள்ளிவிட்டு தலைமறைவாகிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது34). இவரது மனைவி காளீஸ்வரி (32). இதே ஊரை சேர்ந்தவர் கலைவாணன் (25). இவருக்கும், காளீஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. கருப்பசாமி இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.

நேற்று கருப்பசாமி வெளியூர் சென்று விடவே தனிமையில் காளீஸ்வரி, கலைவாணனை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். ஆனால் ஊருக்குப் போன கருப்பசாமி நள்ளிரவில் வீட்டுக்கு வந்துள்ளார். கதவை தட்டாமல் ஜன்னல் வழியாக பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மனைவி, கலைவாணனுடன் தனியே இருப்பதைப் பார்த்து ஆத்திரம் அடைந்தார்.
உடனே தனது மனைவி காளீஸ்வரி மற்றும் கலைவாணனை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த காளீஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கலைவாணன், பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதனை பார்த்ததும் கருப்பசாமி அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். அதன் பிறகு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கலைவாணனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
கொலை குறித்த தகவல் கிடைத்ததும் சிவகாசி கிழக்கு போலீசார் விரைந்து சென்று காளீஸ்வரி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய கருப்பசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications