டெஸ்ட் ட்ரைவ் பார்க்கலாமா?… ரூ 30,000 மதிப்புள்ள பைக்கோடு 'ஜூட்' விட்ட வாலிபர்!
வேலூர்: ஷோரூமில் இருந்த பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்வதாகக் கூறி நூதனமாக திருடிச் சென்ற இளைஞரை ராணிப்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை நவல்பூரை சேர்ந்த வஜ்ஜிரவேலு ஆட்டோ பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரது கடைக்கு வந்த இளைஞர் ஒருவர், தனக்கு புதிய பைக் வாங்க வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வஜ்ஜிரவேலு கடையில் இருந்த பைக்குகள் ஒவ்வொன்றாக பார்த்து வந்த அந்த இளைஞர், ரூ 30 ஆயிரம் மதிப்புள்ள பைக் ஒன்றைக் காட்டி தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அந்த பைக்கை ஓட்டிப் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
வாலிபரின் பேச்சை நம்பிய வஜ்ஜிரவேலு, வாகனத்தை ஓட்டிப் பார்க்கும் படி அதன் சாவியை அந்த இளைஞரிடம் கொடுத்துள்ளார்.
சாவியை வாங்கிய இளைஞர் வண்டியை எடுத்துக் கொண்டு காணாமல் போய்விட்டார். வாகனத்துடன் சென்றவர் எப்படியும் திரும்பி வருவார் என இரண்டு நாட்கள் காத்திருந்திருக்கிறார் வஜ்ஜிரவேலு. பின்னர், இது தொடர்பாக ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார்.
புகாரையடுத்து நூதன முறையில் பைக்கை தேடிச் சென்ற வாலிபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications